சர்கார் திரைப்படம் பார்த்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்...புகைப்படம் உள்ளே

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சர்கார்.
இதற்காக காலை முதலே தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிய தொடங்கினர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகியிருந்தாலும், சர்கார் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
3வது முறையாக விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய்க்கு அடுத்தபடியாக வரலட்சுமி நடிப்பு ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
என்னதான் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் இருந்தாலும், வரலட்சுமி நடிப்பு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ் படம் முழுவதும் வந்தாலும் அவரது கதாபாத்திரம் சொல்லும் படியாக ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு தான் உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் தமிழக வீரர்கள் அஸ்வின், விஜய் சங்கர் உள்ளிட்டோர் சர்கார் திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர்.


Post a Comment

0 Comments