# முகேஷ் அம்பானி (Mukesh Ambani)
Mukesh Dhirubhai Ambani is an Indian business magnate. Chairman, managing director of Reliance Industries Limited (RIL).
- உங்கள் பார்வையை விசாலமாக திறந்து வையுங்கள்.
- பயபடாதீர்கள், வலுவாக இருங்கள்.
- கனவு காணுங்கள்.
- மன உறுதியுடைய குழுக்களை உருவாக்குங்கள்.
- ரிஸ்க் எடுப்பதிலிருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
- வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள்.
- உங்கள் உறுதியான உள்ளுணர்வுகளை நம்புங்கள்.
- உங்களை பற்றி நீங்கள் செய்த காரியங்கள்தான் பேசும்.
- எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.
# ஜாக் மா (Jack Ma)
Jack Ma is the founder and executive chairman of Alibaba Group. Chinese business magnate and philanthropist.
- புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.
- உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).
- குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.
- உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
- உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள்.
- ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.
- உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.
- முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.
- நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல், கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
- உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
# லாரி பேஜ் (Larry Page)
Larry Page is an co-founded Google. He is the CEO of Google’s parent company, Alphabet Inc.
- பெரிய இலக்குகளை நிர்ணயுங்கள்
- தோல்விகளுக்கு பயப்படாதீர்கள்.
- நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள்.
- உங்கள் கனவுகளை பின்பற்றுங்கள் (Follow Your Dreams).
- சிறந்த ஐடியாக்களை வைத்திருங்கள். பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு சிறந்த ஐடியாக்கள் இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள்.
- உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.
- சவால்களை ஏற்றுகொள்ளுங்கள்.
- ஒரே நிலையில் தங்கிவிடாதிர்கள். சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
- மாற்றங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- பெரிய பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்தான் தொழிலுக்கு மூல காரணம். கூகுளும் தகவல் கிடைப்பதில் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுதான்.
# ஜெப் பெசாஸ் (Jeff Bezos)
Jeff Bezos is founder and CEO of Amazon.com. He is an American technology entrepreneur and investor.
- நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.
- நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).
- உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் (Passion) விசயத்தையே பின்பற்றுங்கள்.
- வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
- நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
- வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள்.
- மார்க்கெட்டிங்கை விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக அதிகம் செலவழியுங்கள்.
- உங்கள் நிறுவனத்தில் கலாசாரத்தை உருவாக்குங்கள்.
- சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.
- உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல.
# Robert Kiyosaki
Robert Kiyosaki is an American businessman, investor, self-help author, educator, motivational speaker, activist, financial commentator, and radio personality.
- உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் (Like minded) கொண்ட ஆதரவான மனிதர்களை வைத்திருங்கள்.
- கடினமான தருணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை (Opportunities) உருவாக்கும்.
- நீங்கள் சேமிப்பதை விட முதலீடு செய்யுங்கள்.
- எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள்.
- உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்
0 Comments